மண்டல அளவிலான கிராம
அறிவியல் திருவிழா வானவில் மன்ற கருத்தாளர் களுக்கான பயிற்சி
வேலூர் , டிச,19 -
வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான அரசுப்பள்ளிகளில் வானவில் மன்றம் சிறப்பாக செயல்படுத்தும் வகையில் வானவில் மன்ற கருத்தாளர் களுக்கு வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கூட்ட அரங்கில் மீளாய்வுக் கூட்டமும் பரிசோதனைகளை விளக்கும் பயிற்சியும் அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் கிராமங்களை தேர்வு செய்து அறிவியல் திருவிழாக்களை நடத்துவதற்கான பயிற்சியும் காலை 10:00 மணியளவில் நடைபெற்றது.
வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி. செ.மணிமொழி அவர்களின் வழிகாட்டுதலின்படி மாவட்ட உதவித் திட்ட அலுவலர் கே.எம்.ஜோதீஸ்வரபிள்ளை அவர்கள் கூட்டத்தைத் துவக்கி வைத்து கருத்தாளர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்து ஆலோசனைகளை வழங்கினார். வானவில் மன்ற மாநில ஒருங்ணைப்புக்குழு உறுப்பினர் எஸ்.சுப்பிரமணி எய்டு இந்தியா மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சுப்பிரமணி ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் முன்னிலை வகித்து பேசினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சா.குமரன் அறிமுக உரையாற்றினார்.
திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், வேலூர் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் கே.விசுவநாதன், ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
வழிகாட்டு நெறிமுறைகளைக் கூறி கருத்தாளர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தார். மாவட்ட உதவித் திட்ட அலுவலரிடமும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சா.குமரன் அவர்களிடமும் கருத்தாளர்களின் வேலை அறிக்கையின் நகல் சமர்ப்பிக்கப்பட்டது.
அரசுப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும், எதையும் ஆராய்ந்து பார்த்து கேள்வி கேட்கும் பழக்கத்தை உருவாக்கவும், அறிவியல் மற்றும் கணிதம் தொடர்பாக, புதியவற்றை அறிந்துகொள்ளும் எல்லையில்லா ஆர்வத்தை உண்டாக்கவும் 'வானவில் மன்றம்' திட்டம் 2023-24ஆம் கல்வியாண்டில் உருவாக்கப்பட்டுள்ளது.
அறையாண்டு தேர்வு முடிந்த பின் உள்ள விடுமுறை நாட்களில் வானவில் மன்ற கருத்தாளர்கள் தங்களுடைய பகுதியில் கிராமங்களை தேர்வு செய்து அந்த கிராமத்தில் உள்ளவர்களிடையே அறிவியல் திருவிழா நடத்த உள்ளனர். இவ்விழாவில் அறிவியல் பரிசோதனை அறிவியல் சிந்தனைகள் கருத்துகள் மற்றும் கிராமத்தில் உள்ள மாணவர்கள் சிறப்பாக கல்வி பெறும் வாய்பு குறித்து கலந்துரையாடள் நடத்திட திட்டமிட்டுள்ளனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment