மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளர் பெயிண்டர் உயிரிழப்பு - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 19 December 2024

மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளர் பெயிண்டர் உயிரிழப்பு

குடியாத்தம் மின்சாரம் தாக்கி பெயிண்டர் உயிரிழப்பு

குடியாத்தம் ,டிச 19 -

வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டத்தில் இன்று 19.12.2024 மாலை 5.30 மணியளவில் குடியாத்தம் டவுன்,  ஜோதி பள்ளி எதிரே உள்ள வீட்டிற்கு பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்த லோகநாதன் த/ பெ முருகேசன் (வயது- 60) என்பவர்  மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்

மேற்படி சம்பவம் குறித்து குடியாத்தம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேற்படி நபரின் உடலானது உடற் உடற்கூறு ஆய்வுக்காக  அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. மேலும் மேற்படி நபர் செருவங்கி சாமுண்டிபுரம்  பகுதியை சேர்ந்தவர்    பெயிண்டர் எனவும், இவருக்கு லதா என்கிற மனைவியும் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. 

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad