குடியாத்தம் டிச , 27 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் மாயமான பேருந்து மீண்டும் கொண்டு வந்து நிறுத்திய மர்ம நபர்கள் -அதிகாரிகள் விசாரணை
வேலூர் மாவட்டம் குடியாத்தம்,,
கடந்த சில நாட்களாக சுற்றுலா சொகுசு பேருந்து இருசக்கர வாகனத்தின் பதிவு எண் கொண்டு சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக சென்னை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் இருந்து வந்த தகவலின் அடிப்படையில் நேற்று முன் தினம் இரவு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் வாகன தணிக்கை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் இந்த நிலையில் குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் அப்பொழுது ஆந்திர பதிவின் கொண்ட பேருந்தை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் அந்தப் பேருந்து ஆந்திர மாநிலத்தில் உள்ள இருசக்கர வாகனத்தின் பதிவு எண் என விசாரணையில் தெரிந்தது
இதனையடுத்து பேருந்தை பறிமுதல் செய்து குடியாத்தம் மோட்டார் வாகன அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைத்து அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் அபராதம் செலுத்தாத நிலையில் பேருந்தை மாயமாகி உள்ளது இதனையடுத்து மோட்டார் வாகன அலுவலகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது அதில் மர்ம நபர் பேருந்தை எடுத்துச் சென்றது தெரிய வந்தது
இதனையடுத்து குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் பேருந்து கடத்தப்பட்டதாக மோட்டார் வாகன ஆய்வாளர் புகார் அளித்தார் புகாரின் பேரில் குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் மீண்டும் அதே பேருந்தை மர்ம நபர்கள் குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் நிறுத்திவிட்டு சென்றுள்ளனர் மேலும் பேருந்து எடுத்துச் சென்றது யார் மீண்டும் கொண்டு வந்து விட்டது யார் என்பது குறித்து அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment