வேலூர் காவலர் பயிற்சி பள்ளியில்
பெண் பயிற்சி காவலர்களுக்கு
முதலுதவி பயிற்சி மற்றும் செயல் விளக்கம்
வேலூர் ,டிச 20 -
வேலூர் காவல் பயிற்சிப் பள்ளியில் 182 ஆயுதப்படை இரண்டாம் நிலைப் பெண் பயிற்சி காவலர்களுக்கு சென்னை காவல் பயிற்சிப் பள்ளியின் அட்டவணைப்படி முதலுதவி சிகிச்சை பற்றிய சிறப்பு வகுப்புகள் காட்பாடி வட்ட இந்திய ரெட்கிராஸ் சங்கத்தின் சார்பில் நடைபெற்றது.முதலுதவி பயிற்சி முகாம் அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன், முதலுதவி பயிற்சி விரிவுரையாளர்கள் பெ.முருகேசன், க.குணசேகரன் ஆகியோர் 19.12.2024அன்று மாலை 4.00 மணி முதல் 6 மணி வரை வேலூர் கோட்டையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் செயல்முறை விளக்க பயிற்சி அளித்தனர்.
இந்த பயிற்சி முகாமிற்கு முதல்வர் கே. ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார் சட்ட போதகர் சி.சிவசங்கர் முன்னிலை வகித்தார். காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் அவை துணைத்தலவர் ஆர்.விஜயகுமாரி, மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் எஸ்.ரமேஷ்குமார் ஜெயின், பி.என்.ராமச்சந்திரன் பொருளாளர் வி.பழனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உதவி சட்ட போதகர்கள் சிவகுருநாதன், லட்சுமி, ரெங்கநாதன், கிரிஜா, புஜ்வாணி, சௌந்திரராஜன் நிர்வாக உதவி ஆய்வாளர் என்.ஏழுமலை, ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இந்த பயிற்சி முகாமில் 182 இரண்டாம் நிலை பெண் காவலர்களுக்கான பயிற்சி காவலர்கள் பங்கேற்றனர்.
இந்த பயிற்சியில் முதல் உதவியாளர் செய்ய வேண்டிய செயல்பாடுகள் மற்றும் பாதிக்கப்பட்ட நபர் மயக்க நிலையில் இருந்தால் எப்படி முதலுதவி அளிப்பது, செயற்கை சுவாசம் அளிக்கும் முறை, எலும்பு முறிவு ஏற்பட்டால் கட்டுப் போடும் முறைகள், பாம்புக்கடி, விஷப் பூச்சிக் கடி ஏற்பட்டால் செய்யக்கூடிய நடைமுறைகளில் காயம் ஏற்பட்ட பகுதியில் ரத்த ஒழுக்கை தடுப்பதற்கான நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு செயல் முறை விளக்கங்கள் க்கப்பட்டது பயிற்சி காவலர்களுக்கான பயிற்சி எட்டு மாதம் நடக்கிறது 7 மாதங்கள் பயிற்சியாகவும் எட்டாவது மாதம் காவல் நிலையத்திலும் பயிற்சி அளிக்கப்படுகிறது என்று முதலுதவி பயிற்சியானது இன்று அளிக்கப்பட்டது
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment