புத்த கங்களுடன் புத்தாண்டு வரவேற்போம் காட்பாடியில் புத்தகக் கண்காட்சி! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 30 December 2024

புத்த கங்களுடன் புத்தாண்டு வரவேற்போம் காட்பாடியில் புத்தகக் கண்காட்சி!

புத்தகங்களுடன்  புத்தாண்டுடினை வரவேற்போம் காட்பாடியில் புத்தகக் கண்காட்சி

காட்பாடி , டிச 30 -

வேலூர் மாவட்டம் காட்பாடி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், காட்பாடி வாசகர் வட்டம்,  பாரதி புத்தகாலயம், மின் சிறகுகள் கலைக்குழு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு தமிழ்நாடு மின்சார வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு வேலூர் வட்டம் இணைந்து புத்தகங்களுடன் புத்தாண்டு என்ற தலைப்பில் புத்தக கண்காட்சியை நடத்தினர்.  

இந்த புத்தக கண்காட்சிக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கிளைத்தலைவர் எழுத்தோவியன் தலைமை தாங்கினார் செயற்குழு உறுப்பினர் டி.நேதாஜி வரவேற்று பேசினார்.  
மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா புத்தக கண்காட்சியை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.  அப்போது அவர் கூறியதாவது.  புத்தகங்களோடு புத்தாண்டினை வரவேற்போம் வாசிப்போம் நேசிப்போம் என்கின்ற உரத்த சிந்தனையோடு இந்த புத்தக கண்காட்சியானது நடைபெறுகிறது. புத்தகங்கள் படிப்பதன் மூலம் நாம் பல்வேறு தகவல்களை தெரிந்துகொள்ள முடியும்.  எனவே  நாம் தினமும் புத்தகங்களை படிப்போம் எனவே காட்பாடியில் நடைபெறும் புத்தக கண்காட்சிக்கு அனைவரும் வருகை தந்து தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கிச் சென்று பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார். 
புத்தக விற்பனையை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் ஓய்வுபெற்ற தொழிற் கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன், தலைமையாசிரியை மா.சினேகலதா ஆகியோர் துவக்கி வைத்தனர்.  துளிர் பள்ளியின் தலைமை ஆசிரியை த.கனகா முதல் விற்பனையில் புத்தகங்களை பெற்றுக்கொண்டார்.  
விவசாய சங்க மேனாள் செயலாளர் எஸ்.தயாநிதி, செஞ்சி ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் எஸ்.சுரேந்திரன், செயற்குழு உறுப்பினர் க.ச.சிவக்குமார், வாழ்த்தி பேசினர் 
ஓய்வுபெற்ற மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் கோபால இராசேந்திரன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட தலைவர் பெ.அமுதா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க காட்பாடி செயலாளர் லோ.நவீன் மின் சிறகுகள் கிளை செயலாளர் கு.தர்மன், மின் ஊழியர் மத்திய அமைபின் செயலாளர் டி.ஜெகன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் எம்.கோவிந்தராஜ், செயலாளர் எம்.சின்னதுரை எம்.கணேஷ், துணைத்தலைவர் மைதிலி மீரா, பி.திலீபன், ஆர்.சுந்தர்ராஜ், துர்கா சுடரொளியன் லலிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர் 
காட்பாடி காந்திநகர் எல்ஐசி கிளை அலுவலகம் எதிரே இதற்கான கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டு டிசம்பர் 30 மற்றும் 31 ஆகிய நாட்கள் நடைபெற்றது. இந்த கண்காட்சி அரங்கில் 500க்கும் மேற்பட்ட தலைப்புகளில் 5000 புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

வேலூர் மாவட்ட தாலுகா செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad