வானவில் மன்ற கருத்தாளர் களுக்கான பயிற்சி! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 31 December 2024

வானவில் மன்ற கருத்தாளர் களுக்கான பயிற்சி!

வானவில் மன்ற கருத்தாளர் களுக்கான பயிற்சி

காட்பாடி , டிச 31 -

வேலூர் மாவட்டம்  காட்பாடி அரசுப்பள்ளிகளில் வானவில் மன்றம் சிறப்பாக செயல்படுத்தும் வகையில் வானவில் மன்ற கருத்தாளர் களுக்கு காட்பாடி அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் டிசம்பர் மாத வேலை அறிக்கை சமர் பித்தல் மற்றும் மீளாய்வுக்கூட்டமும் ஜனவரி மாதத்திற்கான பரிசோதனைகளை விளக்கும் பயிற்சியும் காலை 10:00 மணிக்கு நடைபெற்றது.
வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி. செ.மணிமொழி அவர்களின் வழிகாட்டுதலின்படி மாவட்ட உதவித் திட்ட அலுவலர் பொறுப்பு கே.எம்.ஜோதீஸ்வரபிள்ளை அவர்கள் கூட்டத்தைத் துவக்கி வைத்து கருத்தாளர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்து  ஆலோசனைகளை வழங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வாழ்த்தி பேசினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சா.குமரன் அவர்களிடமும்  கருத்தாளர்களின் வேலை அறிக்கையின் நகல் சமர்ப்பிக்கப்பட்டது. 
இணை ஒருங்கிணைப்பாளர் கே.விசுவநாதன், அறிவியல் பரிசோதனைகளையும்  கணித செயல்பாட்டையும் செய்து காட்டி விளக்கினர். உபகரணங்கள் சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டு பயிற்சியில் பயன்படுத்தப்பட்டது. 15 கருத்தாளர்களும் பயிற்சியில் பங்கு பெற்றனர்.எதிர்காலத் திட்டம் மற்றும் வேலை அறிக்கையின் தொகுப்பும் கருத்தாளர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. 
6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கான  அறிவியல் மற்றும் கணிதம் பாடத்தில் பொருளின் எடையும் புவியீர்ப்பு முடுக்கமும், மின் துகள்களின் இடமாற்றம், கரைசல்கள், தாவர சாகுபடி விதை விதைப்பதற்கான பொதுவான முறைகள், முக்கோணங்கள் அவற்றின் பண்புகள் ஆகிய செயல்முறை பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
முடிவில் இணை ஒருங்கிணைப்பாளர் கே.விசுவநாதன் நன்றி கூறினார்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad