புதுமைப்பெண் திட்டம் நன்றி தெரிவித்த ஆசிரியர் கூட்டமைப்பினர் வாழ்வாதார கோரிக்கை நிறைவேற்ற கோரி மனு! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 20 December 2024

புதுமைப்பெண் திட்டம் நன்றி தெரிவித்த ஆசிரியர் கூட்டமைப்பினர் வாழ்வாதார கோரிக்கை நிறைவேற்ற கோரி மனு!

அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டம் தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் வரவேற்பு, நன்றி - வாழ்வாதார கோரிக்கைகளையும் நிறைவேற்ற முதல்வருக்கு வேண்டுகோள்

வேலூர் ,நவ 20 -

வேலூர் மாவட்டம் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் வேலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று வேலூர் ஆசிரியர் இல்லத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆ.ஜோசப் அன்னையா தலைமையில் நடைபெற்றது.  

கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர்
செ.நா.ஜனார்த்தனன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாநில செயல்பாடுகள் குறித்து  பேசினார்.    முன்னதாக தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் ஆர்.ஜெயக்குமார் வரவேற்று பேசினார்.தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் எம்.எஸ். செல்வகுமார் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் க.குணசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்து பேசினர். 

பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று தமிழ்நாடு அரசு அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த மாணவிகள் உயர்கல்வி பெற கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டம் நீட்டித்து வழங்கப்படும் என அறிவித்துள்ளது.  மேலும் புதுமைப்பெண் திட்டம் 30.12.2024 அன்று தூத்துக்குடியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கிவைப்பார் என்ற அறிவிப்பினை இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மனதார வரவேற்கிறது.  நன்றியினை தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2. கோவை மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுப்பதற்கு கூட whatsapp குழுவில் விண்ணப்பித்து மாநகராட்சி ஆணையரின் முன் அனுமதி பெற்ற பிறகு விடுப்பு எடுக்க வேண்டும் என்றும் மருத்துவ விடுப்பு ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட விடுப்புகள் எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் நேரடியாக கோவை மாநகர ஆணையரின்அனுமதி பெற வேண்டும் என்ற அதிகார துஷ்பிரயோக நடவடிக்கையினை திரும்ப பெற தீர்மானம் நிறைவேற்றி இருந்தோம் அந்த தீர்மானத்தினை ஏற்று  கோவை மாநகர ஆணையர் இந்த உத்தரவினை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார்கள் இதனை வேலூர் மாவட்ட இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு வரவேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

3. வாழ்வாதார கோரிக்கைகளான புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் ஈட்டிய விடுப்பு சரண் செய்யப்படும் நடைமுறை பறிக்கப்பட்டதை மீண்டும் வழங்க வேண்டும் இடைநிலை, முதுகலை, தலைமை ஆசிரியர்களின்  ஊதிய முரண்பாடுகளை களைய  வேண்டும் திமுக அரசால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்கின்ற பத்து அம்ச கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றிடக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
முடிவில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில துணைத்தலைவர் பி ஜெயப்ரகாஷ்  நன்றி கூறினார்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad