இந்தியன் ரெட் கிராஸ் சங்கம் மற்றும் ஜங்ஷன் அலையன்ஸ் சங்கம் இணைந்து புத்தாண்டு கொண்டாட்டம்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 29 December 2024

இந்தியன் ரெட் கிராஸ் சங்கம் மற்றும் ஜங்ஷன் அலையன்ஸ் சங்கம் இணைந்து புத்தாண்டு கொண்டாட்டம்!

காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் சார்பில் புத்தாண்டு தினம் முன்னிட்டு  சாலையோர வாசிகள், முதியவர்கள், மாற்றுத்திறன் கொண்டவர்ளுக்கு மதிய உணவு

காட்பாடி ,டிச 29 -

வேலூர்  மாவட்டம் காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கம் மற்றும் காட்பாடி ஜங்சன் அலையன்ஸ் சங்கம் இணைந்து ஆங்கில புத்தாண்டினை முன்னிட்டு காட்பாடியில் சாலையோரம் வசிப்பவர்களுக்கு மதிய சைவ அசைவ உணவு, குடிநீர், டவல் ஆகியவற்றை 150 பேருக்கு  வழங்கினர். 
ஆங்கில புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு காட்பாடி ரயில் சந்திப்பு பகுதி சித்தூர் பேருந்து நிலையம், காந்திநகர், ஓடை பிள்ளையார் கோயில், சில்க்மில், விருதம்பட்டு, வேலூர் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கும் மாற்றுத் திறனாளி களுக்கும் ஒரு வேளை உணவு, குடிநீர்,  வழங்கும் நிகழ்வு இன்று பிற்பகல் நடைபெற்றது.  இந்த நிகழ்விற்கு அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். டாக்டர்.ஜார்ஜ் ஜோஷி, டாக்டர்.சுரேஷ்பிரபாகர குமார் டாக்டர்.எ.ஜெ.சாம்ராஜ், ரவிச்சந்திரன் ஆகியோர் ஒரு வேளை உணவு, குடிநீர், டவல் ஆகியவற்றை 150பேருக்கு வழங்கினர்.மேலாண்மைக்குழு உறுப்பினர் டி.லிவிங்ஸ்டன் மோசஸ், அவை பொருளார் வி.பழனி,  துணைத்தலைவர் இரா.சீனிவாசன்,   செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு, அலையன்ஸ் சங்கத்தின் சாசன தலைவர்கள் பெல்.ரத்தினம், ஆர்.சுமதி, செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் சந்திரகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad