குடியாத்தம் , டிச 23 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக கொடியேற்று விழா மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்குதல் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது
35 வது வார்டு சுண்ணாம்பு பேட்டை பகுதியில் தவெக சார்பில் கொடியேற்றும் விழா நடந்தது.
குடியாத்தம் தொகுதி பொறுப்பாளர் இளங்கோ தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் ஹரி சுரேஷ் விக்னேஷ் சவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக வேலுார் மாவட்ட பொறுப்பாளர் வேல்முரு கன் கலந்துகொண்டு, கட்சி கொடி ஏற்றி வைத்து, இனிப்பு வழங்கினார். தொடர்ந்து 100 மாணவர்களுக்கு நோட்டு, பேனா, அதேபோல் நூறு பேருக்கு புடவை, மற்றும் மளிகை சாமான், பிளாஸ்டிக் குடங்கள் வழங்கப்பட்டன.
இதில் வேலுார் தொகுதி பொறுப்பாளர் சீனிவாசன் சுரேஷ் சவிதா பாண்டுரங்கன் தாழை பாஸ்கர்
உட்பட மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment