குடியாத்தம் அடுத்த
பங்கரிசி குப்பம்
எம்ஜிஆர் நகர் பகுதியில் உள்ள
மருத்துவர் அனிதா இரவு பள்ளி சார்பாக மாபெரும் கபடி போட்டி
குடியாத்தம் , ஜன 01 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த
பங்கரிசி குப்பம் எம் ஜி ஆர் நகரில் மருத்துவர் அனிதா இரவு பள்ளி மற்றும் செவன் பிளவர்ஸ் கபடி அணியின் சார்பாக ஆறாம் ஆண்டு மாபெரும் பெண்கள் கபடி போட்டி நடைபெற்றது. முதல் பரிசு 25 ஆயிரம் இரண்டாம் பரிசு 20 ஆயிரம் மூன்றாம் பரிசு 15 ஆயிரம் நான்காம் பரிசு பத்தாயிரம். அனைத்து பரிசுகளுக்கும் வெற்றி கோப்பை வழங்கப்பட்டது. ஊர் நாட்டான்மை மேட்டுக்குடி நிர்வாகிகள் தலைமை தாங்கினார் அமைச்சூர் கபடி கழக துணைத் தலைவர் இராசி .தலித் குமார் போட்டியை துவக்கி வைத்தார். இதில் சென்னை ஈரோடு வேலூர் சேலம் திருப்பத்தூர் திருநீர்மலை திருவண்ணாமலை ராணிப்பேட்டை அரியூர் கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களைச் சார்ந்த இருபது தலைசிறந்த பெண்கள் அணியினர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியை மருத்துவர் அனிதா இரவு பள்ளி ஒருங்கிணைப்பாளர் திருமலை ஏற்பாடு செய்திருந்தார். அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் உடற்கல்வி ஆசிரியர் புனிதவதி உணவு ஏற்பாடு செய்தார். போட்டியின் நடுவர்களாக தவமணி சிவராமன் சேட்டு மற்றும் பலர் பணியாற்றினார். மற்றும் சோழ பாண்டியன் ஜிபிடர் எழில் காத்தவராயன் போன்றோர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment