காட்பாடி கிறிஸ் டியான் பேட்டையில் நௌராஸ் எண்டர்பிரைசஸ் ஏர்கம்ப்ரஸர் நிறுவனம் திறப்பு விழா!
வேலூர்,ஜன.1-
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, கிறிஸ்டியான் பேட்டை பகுதியில் நௌராஸ் எண்டர்பிரைசஸ் என்ற ஏர்கம்ப்ரசர் நிறுவனம் புதியதாக கட்டப்பட்டு புத்தாண்டில் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நவுராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் வாயிலாக ஏர் கம்ப்ரசர், ஏர் டிரையர் சம்பந்தப்பட்ட மெஷினரிஸ் விற்பனை மற்றும் சர்வீஸ் மற்றும் வாடகை விடுதல் ஆகிய சேவைகள் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஏர் கம்ப்ரசர் மூலமாக தொழிற்சாலைகளுக்கு தேவையான சிறந்த சர்வீஸ் வசதிகளையும் இந்த நௌராஸ் நிறுவனம் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நௌராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் கிளைகள் ஷார்ஜா, அபுதாபி மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் தலைமையகம் வேலூர் மாவட்டம், காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையில் திறக்கப்பட்டு செயல்படத் தொடங் கியுள்ளது குறிப்பிடத்தக்கது. விழாவை முன்னிட்டு இந்த நௌராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள் தங்களது வாடிக்கை யாளர்கள், நண்பர்கள், உறவினர்கள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோருக்கு பிற்பகல் பிரியாணி விருந்து அளித்து உபசரித்து அவர்களை உற்சாகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
No comments:
Post a Comment